இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்றைய ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும்வலியுறுத்தியுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தி;ற்கான அனுமதியை பெறுமாறு பொலிஸார் தங்களிற்கு சட்டவிரோதமாக அனுப்பிவைத்துள்ளனர் என தொழிற்சங்கங்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரிவித்தமைக்கு பதில் அளிக்கையில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
பொலிஸ் கட்டளை சட்டத்தின் 77 பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டங்களிற்கு அனுமதியுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசமைப்பே நாட்டின் அதி உச்ச சட்டம் என பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மனித உரிமை ஆணைக்குழு அடிப்படை உரிமைகளை மீறுவதால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 28 ம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட பரிந்துரைகளை பின்பற்றுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment