தற்காலிகமாக கைவிடப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் பஸ் சேவைகளின் வேலைநிறுத்தம்...!


அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு முதல் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்க நடவடிக்கை இமைப்பின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பஸ் உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்படும் அதிக டெண்டர் கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இணக்கம் தெரிவித்ததன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Post a Comment

Previous Post Next Post