கந்தகாடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் ; முழுமையான அறிக்கை கோரும் ஜனாதிபதி...!


கந்தகாடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொலன்னறுவை, வெலிகந்த, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதோடு, பல கைதிகள் தப்பிச் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில், ஜனாதிபதி சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை கோரியுள்ளதோடு, இவ்வாறான சம்பவங்கள் மீளவும் இடம்பெறாதிருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்பஷவை கோரியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post