இந்திய, பிரான்ஸ் விமானப்படை ஜோத்பூரில் கூட்டு போர்ப் பயிற்சி...!


இந்தியாவினதும் பிரான்ஸினதும் விமானப் படைகள் கருடா கூட்டு விமான போர்ப் பயிற்சியை ஜோத்பூரில் ஆரம்பித்துள்ளன. இப்பயிற்சி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இந்திய விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியில் பிரான்ஸ் நான்கு ரபெல் போர் விமானங்களையும் ஏ–330 பல்வகைப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய போக்குவரத்து விமானமொன்றையும் 220 வீரர்களுடன் ஈடுபடுத்தியுள்ளது. இந்தியா ரபெல் போர் விமானம், சுகோய்–30 எம்.கே.ஐ, தேஜாஸ் மற்றும் ஜகுவார் ஜெட் விமானங்கள், எம்.ஐ. 17 மற்றும் புதிய உள்நாட்டு தயாரிப்பான இலகுரக யுத்த ஹெலிகொப்டர்களுடன் இப்பயிற்சியில் பங்குபற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இக்கூட்டுப் பயிற்சியின் ஊடாக இந்திய விமானப்படையும் பிரான்ஸின் விமான மற்றும் விண்வெளி படையினரும் தங்கள் செயற்பாட்டு திறன்களையும் இயங்குதளத்தையும் மேம்படுத்திக் கொள்வர். இந்திய விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் விமானமும் முன்னெச்சரிக்கை விடுக்கும் விமானங்களும், கட்டுப்பாடு விமானங்களும் கூட இப்பயிற்சியில் இணைந்து கொண்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post