அமைதியாக அமர்ந்திருக்கும்போது எந்த காரணமுமின்றி திடீரென உடலில் ஏதேனும் ஒரு பகுதி இழுப்பதுபோல் உணர்ந்ததுண்டா? அது வலிப்பதோ அல்லது நீண்ட நேரத்திற்கோ இருக்காது. அதனால் பெரும்பாலும் அதனை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள்.
தசைகள் செயல்பாட்டிற்கு கால்சியம் சத்து எவ்வளவு முக்கியமோ அதனுடன் இணைந்து மக்னீசியமும் செயல்படுகிறது. உடலில் மக்னீசியம் குறையும்போது தசைகள் வலுவிழந்து இழுப்பு ஏற்படுகிறது. உடல் தசைகள் ரிலாக்சாக இயங்க மக்னீசியம் மிகவும் அவசியம். முழு தானியங்கள் மற்றும் பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகளில் மக்னீசியம் சத்து நிறைந்திருக்கிறது. இந்த சத்து குறையும்போது தசை பிடிப்பு மற்றும் இழுப்பு போன்ற உணர்வுகள் ஏற்படுகிறது.
தசை இழுப்பிற்கு பிற காரணிகள்
மக்னீசியம் குறைபாடு தவிர பிற காரணங்களாலும் தசை இழுப்பு ஏற்படுகிறது.
1. கஃபைன் அல்லது ஆல்கஹால்
2. மன அழுத்தம்
3. மன பதற்றம்
4. சோர்வு
5. மயக்கம்
தொடர்ந்து இரண்டு வாரங்கள் உடல் தசைகளில் பிடிப்பு அல்லது இழுப்பு பிரன்சை ஏற்பட்டால் அதனை கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது பொதுவாக கால்கள் அல்லது கண்களில் ஏற்படும் அல்லது சில நேரங்களில் உடலின் பிற பகுதிகளிலும் தசை பிடிப்பு ஏற்படலாம்.
மக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள்
1. உடல் பலவீனம்
2. வாந்தி
3. குமட்டல்
4.சோர்வு
5. பசியின்மை
6. உடலில் கால்சியம் குறைபாடு
7. உடலில் பொட்டாசியம் குறைபாடு
8. வலிப்புத்தாக்கங்கள்
9. தசை பிடிப்பு
10. இதய தசை பிடிப்பு
11. இதயதுடிப்பில் மாற்றம்
12. நடத்தை மாற்றம்
13. உணர்ச்சியின்மை
14. கூச்ச உணர்வு
மக்னீசியம் நிறைந்த உணவுகள்
மக்னீசியம் குறைபாட்டுக்கு மருத்துவர்கள் மாத்திரை மருந்துகளை பரிந்துரைத்தாலும், தினசரி உணவு மற்றும் டயட் முறைகளில் மாற்றம் மேற்கொள்வது அவசியம்.
1. டார்க் சாக்லெட்
2. அவகேடோ
3.பச்சை கீரைகள்
4. முழு தானியங்கள்
5. வாழைப்பழங்கள்
6. டோஃபு
7. கொழுப்பு மீன்கள்
8. நட்ஸ் மற்றும் பருப்புகள்
பாரா தைராய்டு சுரப்பியின் சரியாக இயங்க உதவுகிறது. இந்த சுரப்பியிலிருந்துதான் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 300மி.கி மக்னீசியமும், பெண்களுக்கு 270 மி.கி மக்னீசியமும் தேவைப்படுகிறது. ஒருவரின் உடலில் 400 மி.கிராமுக்கு மேல் மக்னீசியம் இருந்தால் அது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.
Post a Comment