முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் அதற்கான எத்தகைய அனுமதியையும் நுகர்வோர் விவகார அதிகார சபை வழங்கவில்லை என்றும் அந்த சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்துள்ள அவர், நிர்ணய விலையை விட அதிகரித்த விலையில் முட்டையை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிவேளை அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த நபர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அறுபது ரூபா வீதம் ஐந்து முட்டைகளுக்கு 300 ரூபாவைப் பெற்றுக்கொண்டுள்ள வீர கெட்டிய பகுதி வர்த்தகர் ஒருவருக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவரை கைது செய்து வலஸ்முல்ல மஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியுள்ளதுடன் அதனையடுத்து அவருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்தது.
Post a Comment