தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவே செயற்படுதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் நேற்று சபையில் கேள்வியொன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
எவ்வாறெனினும் தேர்தல்கள் நடத்துவது தொடர்பில் நாட்டில் தேர்தல்...
அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு போன்று எமது அரசியலமைப்பில் இடம் கிடையாது என்றும் பிரதமர் சபையில் சுட்டிக்காட்டினார். அத்துடன் ஆளும் கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாகவே செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தாம், பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் தெரிவித்த கூற்றை சரியாக விளங்கிக் கொள்ளாமலே எதிர்க்கட்சித் தலைவர் அது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றார் எனத் தெரிவித்த பிரதமர், நல்லாட்சி அரசாங்க காலத்தில் நன்கரை வருடங்களுக்கு பின்னரே பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என சட்டம் கொண்டு வந்ததையும் சபையில் குறிப்பிட்டார்.
அந்த வகையில் நிபந்தனைகளுக்கு அமைய ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்றே, ஹர்ஷ டி சில்வாவுக்கு சபையில் பதில் வழங்கியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
Post a Comment