உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்: ரிஷாத் பதியுதீன் விடுதலை! (Video)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (02) குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே குறித்த உத்தரவை வழங்கினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2021, ஏப்ரல் 24ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் CIDயினால் கைது செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த வருடம் ஒக்டோபர் 14ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்கத்கது.

இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி என்னை மாத்திரமன்றி எமது சமூகத்தையே அழிக்க முயற்சி செய்ததாக குறிப்பிட்டார்.
 

Post a Comment

Previous Post Next Post