பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு; தமிழக அரசு...!



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு வங்கப்படுவது குறித்த ஆலோசனக்கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ. 1000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதன்மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,356.67 கோடி செலவு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



2022ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பில் குளறுபடி ஏற்பட்டதாக எதிர்க்கட்சியினரும், சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post