ரஷ்யாவின் இராணுவம், அதன் இராணுவ கைத்தொழில் தளம், பாகிஸ்தானின் அணுசக்தி செயற்பாடுகள் மற்றும் ஈரானின் இலத்திரனியல் கம்பனிகள் என்பவற்றுக்கு ஆதரவாக செயற்படும் 24 கம்பனிகள் உள்ளிட்ட மற்றும் சில நிறுவனங்களை அமெரிக்கா ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது.
தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கைளைக் காரணமாகக் கொண்டு அமெரிக்கா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
லத்வியா, பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்டுள்ள நிறுவனங்களே இவ்வாறு ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் தொழில்நுட்ப, இலத்திரனியல் உற்பத்தி நிறுவனங்கள், விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான தாயாரிப்பு கம்பனிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீதான போர் ஆரம்பமானது முதல் வெளிநாட்டு தொழில்நுட்பங்கள் ரஷ்யாவுக்குக் கிடைக்கப்பெறுவதையும் ரஷ்ய படையினருக்கு ஆதரவாக நிறுவனங்கள் செயற்படுவதையும் கட்டுப்படுத்த அமெரிக்கா இப்பட்டியலைப் பயன்படுத்தியுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment