நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கு தேவையான மின்சார மீட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
புதிய இணைப்புகளைப் பெறுவதற்காக தற்போது 35,000 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.
எனினும் எதிர்வரும் 3 மாதங்களில் இவர்களுக்கு புதிய இணைப்புக்கள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது இலங்கை மின்சார சபைக்கு மாதாந்தம் 250 மின்மாற்றிகள் தேவைப்படுகின்றன. ஆனால் தற்போதைய டொலர் நெருக்கடியை கருத்தில் கொண்டு மாதாந்தம் சுமார் 100ஐ பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment