கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 70,826 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்த காலப்பகுதிக்குள் 29,650 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியிருந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 41,176 டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடம் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.
வருடத்தின் 49ஆவது வாரமளவில் 55 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள், அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 28 பிரிவுகளில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
நன்றி...
News 1st
Post a Comment