ரொனால்டோ சவூதியின் அல்-நாசர் கழகத்தில் இணைந்தார்…!

போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் இணைந்துள்ளார்.



37 வயதான ரொனால்டோ, 2021 முதல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் கழகத்தில் விளையாடி வந்தார். எனினும், உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன் அவர் அளித்த செவ்வியொன்றில், அக்கழத்தின் பயிற்றுநர் எரிக் டென் ஹக் டென்னை கடுமையாக விமர்சித்திருந்தார். 

அதன்பின், மன்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து ரொனால்டோ வெளியேறிவிட்டார் என அக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் ரொனால்டோ இணைந்துள்ளார். 2025 வரை அல் நாசர் கழகத்தில் ரொனால்டோ விளையாடுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post