இலங்கையின் வறுமை நிலை குறித்து வௌியிடப்பட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை..

 


மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் ஒக்டோபர் மாதத்திற்கான தேசிய வறுமை மட்டத்தை அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதாந்தத் 13,810 ரூபா தேவையாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட அடிப்படையின்படி, கொழும்பு மாவட்டத்தில் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 14,894 ரூபாவான அதிகளவான தொகை தேவையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மொனராகலை மாவட்டம் மிகக் குறைந்த செலவைக் கொண்டுள்ளதுடன் அந்த தொகை 13,204 ரூபாயாகும்.


கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் பதிவான உயர் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மதிப்பு உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post