புதிய வாகனப் பதிவுகளுக்காக வாகன இலக்கத் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் ஜனவரி 1ம் திகதி முதல் அகற்றப்படும் என மோட்டார் பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் ஒவ்வொரு முறையும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது வாடிக்கையாளர்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment