எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது நம் கடமை - சேரன்…!


இயக்குனரும் நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'.

இயக்குனரும் நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேசன்ஸ் சார்பில் ஹரிராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக்ராம் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் இரண்டு நாட்களில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளதாக நடிகர் சேரன் தன்னுடைய சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அந்த பதிவில், "2 நாட்களில் 20 லட்சம் மக்கள் பார்த்திருக்கிறார்கள்... இன்னும் 20 லட்சம் மக்களிடம் சொல்வதற்கான செய்தி உள்ள டீசர் என்பது அவர்கள் பார்த்த வேகத்தில் தெரிகிறது.. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது நம் கடமை..." என்று கூறியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post