போர்ச்சுகல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பிறகு ரொனால்டோவின் மன நிலை எப்படி இருக்கும்…?

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டிகளில் ஒரு கோல் கூட அடித்ததில்லை என்ற மோசமான சாதனையுடன் ரொனால்டோவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

சர்வதேச கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் அண்மையில் 5 உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்கும் கடைசி உலகக்கோப்பைத் தொடர் என்பதால், அவர் விளையாடி வரும் போர்ச்சுகல் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

மொராக்கோ வெற்றி:

ஆனால் மொராக்கோ அணியுடனான காலிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து போர்ச்சுகல் அணி வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் ரொனால்டோவை, அந்த அணியின் பயிற்சியாளர் சாண்டோ களமிறக்கவில்லை. இரண்டாம் பாதியில் தான் ரொனால்டோ களமிறங்கினார்.

மொராக்கோ வெற்றி

ஆனால் கடைசி நிமிடம் வரை ரொனால்டோவால் கோல் அடிக்க முடியவில்லை. மொராக்கோ அணியுடனான தோல்விக்கு பின் மைதானத்தில் கண் கலங்கி கதறி அழுத ரொனால்டோவை பார்த்து அனைத்து நாட்டு ரசிகர்களும் கலங்கினர். தனது உலகக்கோப்பைத் தொடரிலும் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்று ஓய்வறை செல்லும் வரை ரொனால்டோ அழுது கொண்டே சென்றார்.

37 வயதாகும் ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் நிறைவேற அதிக வாய்ப்புகள் இருந்தது.

ரொனால்டோ இல்லாமலேயே நட்சத்திர வீரர்கள் சூழ்ந்த அணியாக போர்ச்சுகல் பார்க்கப்பட்டது.

ஆனால் மொராக்கோ அணியுடனான தோல்வி காரணமாக போர்ச்சுகல் அணியின் பயணத்தோடு, ரொனால்டோவின் கனவும் நிறைவுக்கு வந்துள்ளது. இதுவரை உலகக்கோப்பைத் தொடரின் 8 நாக் அவுட் போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, ஒரு கோல் கூட அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்கர் அலி - பத்திரிகையாளர் 
திண்டுக்கல் மாவட்டம் - தமிழ்நாடு

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளைநம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post