பேருந்தின் சாரதி பஸ்ஸுக்குள் உயிரிழப்பு...

 

மத்தேகொட பிரதேசத்தில் இன்று (20) காலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் பாதுகாப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி பயணித்துள்ள நிலையில் பஸ்ஸின் சாரதி இருக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பஸ் இன்று அதிகாலை 5 மணியளவில் முதல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக கொட்டாவ பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ​​மத்தேகொட பிரதேசத்தில் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த சுவரை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு அருகில் வந்து நின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், பேருந்தின் சாரதி பஸ்ஸுக்குள் உயிரிழந்துள்ளதுடன், மத்தேகொட பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து அவரை வேத்தர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post