கொரோனா பரவல்: இந்திய மருத்துவ சங்கத்துடன் ஆலோசனை…!



நாட்டில் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் உகான் நகரில்தான் முதலில் கொரோனா தோன்றியது. தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா (பி.எப்.7) பரவல் வேகம் எடுக்கத்தொடங்கி விட்டது. இந்தியாவிலும் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், நாட்டில் பரவி வரும் கொரோனா பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார்நிலை குறித்து இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Post a Comment

Previous Post Next Post