கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கான முக்கிய அறிவுறுத்தல்...!


வடகிழக்கு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் கடற்றொழிலில் ஈடுபடும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (16) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- வளிமண்டலவியல் திணைக்களம் -

Post a Comment

Previous Post Next Post