மலையகப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு...!



மலையகப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (25) மத்திய மாகாணத்தில் பெய்த கடும் மழையினால் ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் ரயில் பாதைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டதாலும் மலையகத்துக்கான ரயில் சேவைகள் இடம்பெறவில்லை.

நிலைமைகள் சீரடைந்துள்ளதால் இன்று (26) காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்குமான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, இன்றிரவு தபால் ரயில் சேவையும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ள.

Post a Comment

Previous Post Next Post