தொடர்ந்து விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படம்…!


மாமனிதன்' திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை வென்றுள்ளது

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறு

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. இப்படம் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகி, சிறந்த எடிட்டர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த சாதனையாளர் என நான்கு விருதுகளை வென்றுள்ளது. இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post