பிரபல போதைப்பொருள் வியாபாரியான பெண் கைது..


 சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


63 வயதுடைய குறித்த பெண் ´வெல்லம்பிட்டிய குடு ஸ்வர்ணா´ எனப்படும் போதைப்பொருள் வியாபாரி என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் 940 மில்லிகிராம் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெல்லம்பிட்டிய லான்சியா வத்த பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபருக்கு எதிராக 4 போதைப்பொருள் வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Post a Comment

Previous Post Next Post