சந்திரிக்கா தலைமையில் விசேட கூட்டம்...!


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டொரிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று (08) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, லசந்த அழகியவன்ன ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post