அரசியலமைப்புப் பேரவை நாளை (புதன்) கூடுகிறது..!


அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் புதன்கிழமை (25) காலை 9.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக பதவியணித் தலைமை அதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அத்துடன், சபாநாயகர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் சபாநாயகரினால் பெயர் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத நபர்களை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான நியமனம் அண்மையில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

இதன்படி கலாநிதி பிரதாப் இராமானுஜம், வைத்திய கலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி வெலிகம விதான ஆராச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கலாநிதி இராமானுஜம் அரச சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டிருப்பதுடன், ஒரு தசாப்தத்துக்கு மேலாக பல அமைச்சுக்களின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தில்குஷி அனுலா விஜேசுந்தர துறைசார் வைத்தியநிபுணராவார். கலாநிதி தினேஷா சமரரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'


Post a Comment

Previous Post Next Post