கொழும்பில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது...!


கொழும்பின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது.

காற்றில் தூசு துகள்களின் செறிவு தரச்சுட்டியில் 124 அலகுகளாக உயர்வடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சஞ்சய ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து நாட்டை நோக்கி வீசும் காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த நிலைமைக்கு காரணம் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகளுக்கமைய, தூசு துகள்களின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.

சாதாரணமாக காற்றின் தரம் 101 அலகுகளுக்கும் அதிகமாக காணப்படும் பட்சத்தில், சுவாச ​நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற போதிலும், இது சிறிதளவான அதிகரிப்பையே வௌிப்படுத்தியுள்ளதாக சஞ்சய ரத்நாயக்க கூறினார்.

Post a Comment

Previous Post Next Post