ரயில் கழிவறைக்குள் கைக்குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர் கைது…!


ரயிலுக்குள் உள்ள கழிவறைக்குள் கைக்குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


தாயார் பண்டாரவ நயபெத்தவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தந்தை இன்று காலை கொஸ்லந்தையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தந்தை தெகிவளையில் பணிபுரிபவர் எனவும் அவர் கர்ப்பிணியாகயிருந்த தனது காதலியை கொழும்பிற்கு அழைத்து வந்தார் எனவும் குழந்தை 25 ஆம் திகதி பிறந்தது எனவும் விசாரணையின்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கைக்குழந்தை கொழும்பு - கோட்டை முதல் மட்டக்களப்பு நோக்கி பயணிக்க இருந்த ரயிலின் கழிப்பறையில் இருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடுநிலை மற்றும்  நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...👇

Post a Comment

Previous Post Next Post