கடன் மறுசீரமைப்பு – சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம்



இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதியை இலங்கை பெறுவதற்கு இருந்த பிரதான தடையும் நீக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா தனது உத்தரவாதத்தை வழங்க தாமதித்ததன் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவித் திட்டம் தாமதமானது.

Post a Comment

Previous Post Next Post