இந்த வாரம் முதல் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்...!



நாடு முழுவதிலும் உள்ள செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செவித்திறன் குறைபாடுள்ள 50 பேரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முன்னோடித் திட்டம் இந்த வாரத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், இதில் கலந்துகொண்ட 50 பேரும் வெற்றிகரமாக வாகனங்களை ஓட்டியதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, “அதன் வெற்றியின் அடிப்படையில் இலங்கை முழுவதும் காதுகேளாதவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நன்றி...
Daily-Ceylon

Post a Comment

Previous Post Next Post