சிக்காக்கோவில் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி 19 பேர் காயம்...!

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

சிக்காக்கோவிலிருந்து வில்லோபுரூக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20பேர் சுடப்பட்டனர் ஒருவர் உயிரிழந்துள்ளார் அதிகாரியொருவர் தெரிவி;த்துள்ளார்.

இந்த வன்முறைக்கான காரணம் தெரியவில்லை நாங்கள் 20 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொண்டாட்ட நிகழ்வொன்று இடம்பெறவிருந்த துப்பாக்கி சத்தத்தை கேட்டோம், என ஒருவர் தெரிவித்துள்ளார்.

எல்லோரும் ஓடினார்கள் பெரும் குழப்பம் காணப்பட்டது என மற்றுமொரு நபர் தெரிவித்துள்ளார்.

வாகனத்தரிப்பிடமொன்றிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post