கிறீஸுக்கு அருகில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததால் 59 பேர் பலி...!


கிறீஸுக்கு அருகில் இன்று காலை குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்தால் குறைந்தபட்சம் 59 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுக் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

பெலோபோனிஸ் தீபகற்பத்துக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இப்படகிலிருந்த 100 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கிறீஸ் கரையோர காவல்படை தெரிவித:துள்ளது.

மீட்பு நடவடிக்கைகளில் இராணுவ விமானம், ஹெலிகொப்டர், 6 படகுகள் ஆகியன ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post