பீஜிங் விமான நிலையத்தில் மெஸ்ஸி தடுக்கப்பட்டார்...! (VIDEO)


முறையான கடவுச்சீட்டு இன்றி சீனா சென்ற ஆர்ஜன்டீன நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இரண்டு மணி நேரம் பீஜிங் விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் ஆடுவதற்காகவே மெஸ்ஸி தனது நண்பர்களுடன் கடந்த திங்கட்கிழமை (12) சீனாவை அடைந்ததார். எனினும் அவர் தனது ஆர்ஜன்டீன கடவுச் சீட்டுக்கு பதில் ஸ்பெயின் கடவுச் சீட்டை எடுத்து சென்றதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட மெஸ்ஸி, விசா அனுமதியை பெற்ற பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளார்.

உலக சம்பியனான அர்ஜன்டீன அணி நாளை (15) பீஜிங்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 19ஆம் திகதி ஜகார்த்தாவில் இந்தோனேசியாவுக்கு எதிராகவும் நட்புறவு போட்டியில் ஆடவுள்ளது.
 


Post a Comment

Previous Post Next Post