அனுராதபுரம் - விலாச்சி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதான பெண்ணும், 9 வயதான அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
தாயும் மகளும் பலி
ஜெயந்தி சுற்றுவட்டத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment