தெற்கு காஸாவில் போர் நிறுத்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவிப்பு...!



எகிப்துடனான ரஃபா எல்லை வழியாக காசாவிற்கு உதவிகளை அனுப்புவதற்கு ஈடாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் போராளிகள் மறுத்துள்ளனர்.

காசாவிற்கு உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருளை அனுப்ப அனுமதி வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் போதிலும், காசா பகுதியிலிருந்து வெளியேற ரஃபா எல்லைக் கடவையின் நுழைவாயிலில் பெரும் மக்கள் கூடினர், ஆனால் வாயில் மூடியே உள்ளது.

தெற்கு காசாவில் இருந்து “வெளிநாட்டவர்கள்” வெளியேறுவதற்கு மற்றும் காசாவிற்கு “மனிதாபிமான உதவிகள்” அனுப்பப்படுவதற்கு நேற்றைய தினம் பல மணிநேர போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என்று முன்னர் செய்திகள் இருந்தன.

எனினும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் போராளிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர்.

இஸ்ரேல் காசா மீது தரைவழித் தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கு முன்னதாக ஒரு மில்லியன் பலஸ்தீனியர்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கே தப்பியோடியதாக நம்பப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல அரபு நாடுகளுக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன், சில நாட்கள் இராஜதந்திரப் பணிகளுக்குப் பின்னர், மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்ரேல் திரும்பியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post