GMOA மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு...!


வரிக் கொள்கை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று (11) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை என அதன் தலைவர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருந்துக் கொள்கை மற்றும் விலைச் சூத்திரம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் புதிய சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடியதாக அதன் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post