தனியார் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை - மூன்று பேர் மரணம்!

அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் பேருந்தை செலுத்தி மூன்று பேருக்கு மரணத்தை ஏற்படுத்தி,  மற்றுமொருவரை காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தனியார் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை - மூன்று பேர் மரணம்!

இது தொடர்பான வழக்கு நேற்று  கொழும்பு மேல் நீதி மன்ற  நீதிபதி நாமல் பண்டார முன்னிலையில் இடம்பெற்ற போதே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வழக்கில் பேருந்தின் உரிமையாளருக்கு, 15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 15 மாத சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து மிரிஹான பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post