விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக சீனாவும் கடும் போட்டியிட்டு வருகிறது. அடிக்கடி செயற்கைக்கோள்களை ஏவி சோதனை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் தொடர்பாக சோதனை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இது வெற்றிகரமான நிர்ணயிக்க சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச்-2சி கேரியர் ராக்கெட் மூலம் இன்று காலை உள்ளூர் நேரப்படி செலுத்தப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் சோதனை வெற்றி பெற்றால், செயற்கைக்கொள் மூலம் தகவல் தொடர்புக்கான இணையதள வசதியை வழங்க முடியும். தற்போது எலான் மஸ்க் நிறுவனம செயற்கைக்கோள் மூலம் இணையதளம் வழங்கும் வசதியை கொண்டுள்ளது.
கடந்த 27ம் திகதி விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-11 மூலம் ஏவியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் திசைமாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. ராக்கெட்டின் பூஸ்டர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.
Post a Comment