கிரிக்கெட்டை தாண்டி கூகுளில் சாதனை படைத்த விராட் கோலி!

கூகுள் தேடுதல் பொறியில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட்டர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

கூகுள் தேடுபொறி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தனது 25 ஆண்டு கால பயணத்தை 3 நிமிட காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கூகுள் நிறுவனம், அதில் சரித்திர நிகழ்வுகளை இணைத்துள்ளது. அதிகம் தேடப்பட்ட நபர்கள் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.



அதில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் என்ற பிரிவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட்டராக விராட் கோலியும் இடம் பெற்றுள்ளனர். அதிகம் பயன்படுத்தப்பட்ட ஈமோஜியாக ஹார்ட், அதிகம் தேடப்பட்ட பொம்மை பார்பி என பல்வேறு தகவல்கள் காணொளியில் இடம் பெற்றுள்ளன.

Post a Comment

Previous Post Next Post