சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மோசடி செய்தல், வேறொருவரைப் போல் பாவனை செய்து மோசடி செய்தல் உள்ளிட்ட ஒன்பது அடிப்படை விடயங்கள் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் உள்ளடக்கியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிளர்ச்சி, சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறை, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான பொய்யான அறிக்கைகளை பரப்புதல், தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது, பொய்யான பிரசாரம் செய்து மத, கலாசார முரண்பாடுகளை உருவாக்குவது ஆகியனவும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்த பொது பாதுகாப்பு அமைச்சர், உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளுடன் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் புதிய குற்றச்சாட்டுகள் அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment