தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும்,சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வரும் நடிகர் நரேன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆத்மா’ எனப் பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சுஹீத் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் ‘ஆத்மா’.இதில் நரேன், காளி வெங்கட், பால சரவணன், ஷ்ரிதா ஷிவதாஸ், கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விவேக் மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு மங்கள் ஸ்வர்ணம் மற்றும் ஸாஸ்வத் சுனில் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை காட்ரீஸ் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காத்ரி தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொடக்சன் எனும் நிறுவனம் சார்பில் இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சுசீந்திரன் வழங்குகிறார்.
இப்படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் நடிகர் நரேன் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment