திரையுலகில் பணியாற்றும் தொழில்நுட்ப குழுவினர் தங்களது தனித்திறமையை வளர்த்துக் கொண்டு திரைப்படங்களை இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்தியா முழுவதும் பல மொழி படங்களில் சண்டை பயிற்சிகளை திறம்பட அமைத்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்திருக்கும் சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறீவ் ( அன்புமணி -அறிவுமணி) இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்.
இவர்கள் இயக்கும் முதல் திரைப்படத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் 'உலகநாயகன்' கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி, 2025 ஆம் ஆண்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Post a Comment