தைய்திருநாளை கொண்டாடும் நேயர்கள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்...! Star FM


'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற ஆன்றோர் வாக்கிற்கேற்ப பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தைத்திருநாள் இன்று மலர்ந்தது.

தமிழ் நாட்காட்டியின் முதல் நாளான இன்று நாட்டின் பல பகுதிகளிலும் கோவில்களில் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்களும் ஆரவாரத்துடன் இன்றைய நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' எனும் தெய்வப்புலவரின் வாக்கிற்கிணங்க, கண்கண்ட கடவுளான சூரியனுக்கும்
தனது இரத்தத்தினை வியர்வையாக நிலத்தில் சிந்திப் போராடி படியளக்கும் உழவர்களுக்கும் விவசாயிகளின் உயிருக்கு நிகரான ஆநிரைகளுக்கும் நன்றி செலுத்தும் உன்னதத் திருநாளாக தைப்பொங்கல் மிளிர்கின்றது.

உலகழாவிய ரீதியில் தைய்திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் ஸ்டார் எம் நேயர்கள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றனர் ஸ்டார் வானொலியின் முகைமைத்துவ பணிப்பாளர் நௌபர் அவர்கள் மற்றும் முகாமையாளர் ஜெசீம் அவர்களும்.

Post a Comment

Previous Post Next Post