TIN எண்களை வழங்குவதற்கான புதிய அமைப்பு...!



தற்போதுள்ள அரச நிறுவனங்கள் மூலம் மக்களின் வரிப் பதிவு எண்ணை (TIN) வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்த நிறுவனங்களிடம் இருந்து இந்தத் தகவல்களைப் பெற்று அவற்றைப் பதிவு செய்ததன் பின்னர் இலக்கம் ஒன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சட்ட சிக்கல்கள் இல்லாத நிறுவனங்களில் இருந்து இந்த தகவல்கள் பெறப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

வரி பதிவு எண்ணை ஆன்லைனில் பெறுவதை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.

Post a Comment

Previous Post Next Post