அதிக விஷத்தன்மை கொண்ட எறும்புகளால் பல கிராமங்கள் பாதிப்பா? முழு விபரம்...!



அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனத்தினால் ஊவா பரணகம பம்பரபன, கந்தேகும்புர, ஹலம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகை முசுறு எறும்புகள் கொட்டுவதால் தோல் நோய்கள் கூட ஏற்படுவதாக கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த வகை எறும்புகள், மிளகு, தென்னை, பப்பாளி போன்ற தாவரங்களில் கூட்டமாக வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இந்த எறும்பு இனம் தொற்றுநோயாக மாறுவதற்கு முன், அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post