யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...!



யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் விரிவுரை செயற்பாடுகளில் இருந்து விலகி இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்கள் இன்றைய தினம் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post