நானுஓயா ரதெல்ல குறுக்கு வழி வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 08 பேர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தறை பிரதேசத்தில் இருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி..
அத-தெரண
Post a Comment