ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியின் கடைசி ஓவரில் நடுவர் அளித்த முடிவை அங்கீகரிக்க முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகரும் மூத்த துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த நடுவரின் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சனத் ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment