2024ல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி


2024 ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.17 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

அதேநேரம் 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி செயல்திறன் 1.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 1.95 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதுடன் 2023ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 1.96 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.

Post a Comment

Previous Post Next Post