குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் முதற்கட்டமாக விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும பெற தகுதியானவர்கள் உள்ள போதிலும், முதல் கட்டத்தில் பதிவு செய்யப்பட்டதால் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை. அவர்களுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், முன்பு தரவு அமைப்பில் உள்வாங்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
முன்னர் கொடுக்கப்பட்ட தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக பயனாளிகளைத் தேர்வு செய்த பின் அது செய்யப்படும். அவர்களுக்கு ஒரு போதும் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment