பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார் என காணொளி ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நான் நன்றாகயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார்.
நான் வயிற்றில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவேளை நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றேனா என்ற விபரம் தெரியவரவில்லை ஆனால் சத்திரசிகிச்சைக்கு பிந்திய மருத்துவபரிசோதனைகளின் போது நான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது நான் ஹீமோதெரபி சிகிச்சைக்கு என்னை உட்படுத்தவேண்டியுள்ளது சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளேன் என கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.
Post a Comment